மாட்ரிட்:
ஸ்பெயினில் எருது சண்டைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் கலந்து கொண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


ஸ்பெயின் நாட்டில் காளை சண்டை மிகவும் பிரசித்தி பெற்றதாகும். ஆண்டு தோறும் 2 ஆயிரம் எருது சண்டை நடக்கிறது. இதில் பங்கேற்கும் வீரர்கள் மாட்டை ஈட்டியால் குத்திக் கொன்று வன்முறையில் ஈடுபடுகின்றனர்.


இதற்குதான் ஸ்பெயினில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கொடூரத்தை கற்பிக்கும் பள்ளியாக இது திகழ்கிறது. நாட்டுக்கே அவமான சின்னமாக திகழும் இந்த எருது சண்டையை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுவாக எழுந்துள்ளது. 


இந்நிலையில் எருது சண்டைக்கு எதிர்ப்பு தெரிவித்து தலைநகர் மாட்ரிட்டில் மக்கள் பேரணி நடத்தப்பட்டது. இதில் ஆயிரக் கணக்கானோர் கலந்து கொண்டனர். இந்த பேரணியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


Find out more: