காபூல்:
நீங்க அனுமதிக்காவிட்டால்... நாங்களும் அனுமதிக்கமாட்டோம்... நினைவில் வைத்துக்கொள்ளுங்க...என்று சொல்லியிருக்கார் ஆப்கன் அதிபர். எதற்காக...


வாகா எல்லை வழியாக ஆப்கன் வர்த்தகர்களை இந்தியாவுடன் வர்த்தகம் செய்ய பாகிஸ்தான் அனுமதிக்க வேண்டும் என ஆப்கன் அதிபர் அஷ்ரப் கனி வலியுறுத்தி உள்ளார்.


காபூலில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஆப்கன் அதிபர் அஷ்ரப் கனி, ஆப்கன் வர்த்தகர்களை, வாகா எல்லை வழியாக இந்தியாவுடன் வர்த்தகம் செய்ய பாகிஸ்தான் அனுமதி வழங்காவிட்டால், நாங்களும், எங்கள் நாட்டு வழியாக மத்திய ஆசிய நாடுகளுடன் பாகிஸ்தான் வர்த்தகம் செய்ய அனுமதி வழங்க மாட்டோம்.


ஆப்கன் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்ய பல வழிகள் உள்ளன. ஆப்கனில் உற்பத்தி செய்யப்படும் பழங்களை ஏற்றுமதி செய்ய பாகிஸ்தான் இடையூறு செய்கிறது. ஆப்கன் வர்த்தகர்களுக்கு மில்லியன் டாலர் மதிப்பில் இழப்பு ஏற்படுகிறது. எனவே பாகிஸ்தான் மற்றும் மற்ற நாடுகள் பொருளாதார ஒத்துழைப்புக்கு இடையூறாக உள்ள அனைத்து தடைகளையும் அகற்ற வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.



Find out more: