கிரீஸ்:
450 எலும்புக்கூடுகள்... ஒரே கிணற்றில் கண்டுபிடிக்கப்பட்டால் எப்படி அதிர்ச்சி ஏற்படும். அதிலும் அனைத்தும் குழந்தைகளில் எலும்புக்கூடுகளாக இருந்தால்... அதுதான் நடந்துள்ளது கிரீஸ் நாட்டில்.


 கிரீஸ் நாட்டின் தலைநகர் ஏதென்ஸில் ஒரு பழைய கிணற்றில் ஏறத்தாழ 450 குழந்தைகளின் எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் மிகுந்த அதிர்ச்சியில் உள்ளனர். 


 இதுகுறித்து நடத்தப்பட்ட சோதனையில், குழந்தைகள் சிலர் இயற்கையான நோயினால் இறந்துள்ளனர். பலர் மூளைக்காய்ச்சலினால் இறந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


 சுமார் கி.மு150- கி.மு165 இந்த வருடங்களுக்கு இடையில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. எந்த சம்பவத்தால் இத்தகைய நிலை ஏற்பட்டது என்று இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.


Find out more: