வாஷிங்டன்:
ஐயோ... ஐயோ... ஐயோ...என்னாச்சு ஹிலாரிக்கு என்று ஜனநாயக கட்சியினர் வேதனை அடைந்துள்ளனர்.
விஷயம் என்னன்னா? அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன் நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதுதான்.
இதனால் கலிபோர்னியா பயணத்தை டிராப் செய்துள்ளார் ஹிலாரி. தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இவர் நிமோனியாவால் பாதிக்கப்பட்டுள்ளது அவரது கட்சியினரை வேதனைப்படுத்தி உள்ளது.
அமெரிக்காவில் நடந்த இரட்டை கோபுர தாக்குதல் சம்பவத்தின் 15ம் ஆண்டு நினைவு தினத்தில் கலந்து கொண்ட போதுதான் ஹிலாரிக்கு நிமோனியா இருப்பது தெரியவந்தது. இதனால் ஹிலாரி ஓய்வில் இருக்க வேண்டும் என டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.