பெங்களூரு:
கலவரக்காரர்களை பார்த்தால் சுட்டுத்தள்ள உத்தரவிடப்பட்டுள்ளதால் கர்நாடகாவில் பெரும் பதற்றம் உருவாகி உள்ளது. 


தமிழகத்திற்கு காவிரி நீரை திறந்து விட உச்ச நீதிமன்றம் போட்ட உத்தரவை அடுத்து கர்நாடக மாநிலமே வன்முறையால் பற்றி எரிகிறது. அங்கு வன்முறையாளர்கள் வெறியாட்டம் ஆடி வருகின்றனர். 

Image result for bangalore cauvery issue

கன்னட அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கும்பல், கும்பலாக வந்து தாக்குதல்களில் ஈடுபட்டனர். பெங்களூர் பஸ் நிலையத்தில் இருந்த தமிழ்நாட்டை சேர்ந்தவரின் உணவகம் அடித்து நொறுக்கப்பட்டது. போலீஸ்காரர்களால் கலவரக்காரர்களை கட்டுப்படுத்த இயலவில்லை.


நேற்று மதியம் தொடங்கிய வன்முறை மாலை வரை நீடித்தது. அதன்பிறகும் வன்முறையாளர்கள் ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்தனர். பெங்களூரு அவனஹள்ளியில் தனியார் போக்குவரத்து நிறுவனத்துக்கு சொந்தமான 30 லாரிகளை கன்னட அமைப்பை சேர்ந்தவர்கள் தீவைத்து எரித்தனர்.


அதேபோல் பெங்களூரு கெங்கேரி அருகே துவாரகநாத் நகர் பகுதியில் தனியார் போக்குவரத்து நிறுவனமான கே.பி.என்.க்கு சொந்தமான நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 56 பஸ்களை கன்னட அமைப்பை சேர்ந்த சுமார் 200 பேர் திரண்டு வந்து அந்த பஸ்களுக்கு தீவைத்தனர்.

Image result for bangalore cauvery issue

தொடர்ந்து பதற்றம் நீடிப்பதால் மேலும் அசம்பாவித சம்பவங்கள் நடந்து விடக்கூடாது என்ற காரணத்தால் மத்திய அரசு உடனடியாக 10 கம்பெனி ராணுவத்தை பெங்களூருக்கு அனுப்பியது. அந்த 10 கம்பெனி ராணுவ வீரர்களும் உடனடியாக பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர். இதனால் கர்நாடகத்தில் கன்னட அமைப்பினர் சற்றே அடங்கி உள்ளனர். இருப்பினும் மக்கள் மத்தியில் இருக்கும் அச்சம் மட்டும் நீங்கவே இல்லை. 


16 போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் யார் வன்முறையில் சம்பவத்தில் ஈடுபட்டாலும் கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் கலவரக்காரர்களை கண்டதும் சுட்டுத்தள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.


இரு மாநில போக்குவரத்து அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது. இன்றும் பெங்களூருவில் ஒரு தமிழக பதிவெண் கொண்ட வாகனம் தீ வைத்து கொளுத்தப்பட்டது. பெங்களூருவில் நடக்கும் கலவரம் தொடர்பாக சட்டம் ஒழுங்கை பாதிக்கும் வகையிலோ அல்லது கலவரத்தை தூண்டும் வகையிலோ எந்த நிகழ்ச்சியும் ஒளிபரப்ப வேண்டாம் என்று போலீசார் அறிவுரை வழங்கியுள்ளனர்.


Find out more: