காத்மாண்டு:
நேபாள வெளியுறவுத்துறை அமைச்சர் சென்ற விமானத்தின் டயர் வெடிக்க... விமான நிலையம் மூடப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நேபாள பிரதமர் பிரசண்டா நாளை வியாழக்கிழமை இந்தியா வர இருக்கிறார். இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொள்ள அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஷரன் மஹத் இந்தியா வந்திருந்தார்.
2 நாட்கள் சுற்றுப் பயணம் முடிந்து நேற்று நேபாள ஏர்லைன்ஸ்க்கு சொந்தமான விமானத்தில் நாடு திரும்பினார். டில்லியில் இருந்து புறப்பட்ட அந்த விமானத்தில் அவருடன் 150 பயணிகள் இருந்தனர்.
நேபாளத்தில் உள்ள ஒரே சர்வதேச விமான நிலையமான ட்ரிபுவன் விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கியது. அப்போது விமானத்தின் டயர் வெடித்தது, லேன்டிங் கியர் சேதம் அடைய பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து பாதுகாப்பு கருதி விமான நிலையம் மூடப்பட்டது. விமானத்தில் இருந்த பயணிகள் அவசரமாக தரையிறக்கப்பட்டனர். டயர் வெடித்ததால் ரன்வேயும் சேதம் அடைந்து விட்டது என்று அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.