பநீநகர்:
மீண்டும் ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் பதற்றம் தொற்றிக் கொண்டுள்ளது. காரணம் தோட்டாக்களால் துளைக்கப்பட்ட இளைஞரின் உடல் கண்டெடுக்கப்பட்டதுதான்.


சமீப நாட்களாக காஷ்மீர் சகஜ நிலைக்கு திரும்பி வந்துக்கொண்டிருந்தது. இந்நிலையில் தோட்டாக்களால் துளைக்கப்பட்ட இளைஞரின் உடல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதால் மீண்டும் பதற்றம் தலைதூக்க தொடங்கியுள்ளது. இதையடுத்து, சில மாவட்டங்களில் தளர்த்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு இன்று மீண்டும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.


கடந்த பல நாட்களாக கொதிக்கும் எரிமலை போல் இருந்த காஷ்மீர் தற்போதுதான் சகஜ நிலைக்கு திரும்பி வந்துக் கொண்டிருந்தது. இந்நிலையில் பநீநகரின் ஹர்வான் பகுதியைச் சேர்ந்த இளைஞர் மோமின் அல்டாப் கனாய் என்பவர் நேற்று இரவு பெல்லட் தோட்டாக்கள் பாய்ந்த நிலையில் பிணமாக கண்டெடுக்கப்பட்டார். 


நேற்றிரவு ஹர்வான் பகுதியில் பாதுகாப்புப் படையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டதாம். இதையடுத்து அங்கு பாதுகாப்புப் படையினர் பெல்லட் குண்டுகளை பயன்படுத்தி உள்ளனர். இதில்தான் இவர் பலியாகி உள்ளார் என்ற தகவல் பரவியதால் மீண்டும் கலவரம் உருவாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.


இதையடுத்து பாரமுல்லா, பட்டான், அனந்தநாக், சோபியான், புல்வாமா உட்பட பல பகுதிகளில் மீண்டும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 


Find out more: