மாஸ்கோ:
போர்நிறுத்த ஒப்பந்தம் போட்டா மட்டும் அதை மீறாமலா இருந்து இருக்காங்க... சிரியாவில் இதுவரை 199 முறை போர் ஒப்பந்தம் மீறப்பட்டுள்ளது என்று ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது.


சிரியா அதிபர் பஷர் அல் ஆசாத் தலைமையிலான அரசை பதவியில் இருந்து இறக்கும் நோக்கத்தில் அவரது அதிருப்தியாளர்கள் தொடங்கிய போராட்டமே உள்நாட்டுப் போராக மாறி விட்டது. இதற்கு இடையில் ஐ.எஸ். பயங்கரவாதிகளும் குறுக்கு சால் ஓட்டி தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்டினர். இப்போது சிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் ஆதிக்கம் உள்ள பகுதிகளில் ரஷ்யாவும் அமெரிக்க கூட்டுப்படைகளும் தாக்குதல் நடத்தி வருகின்றன.


தொடர்ந்து நடந்து வரும் போரை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் ஐ.நா.வின் தீவிர முயற்சியின் பலனாக  போர் நிறுத்த ஒப்பந்தத்தில் அமெரிக்காவும், ரஷ்யாவும் கையெழுத்திட்டன. இந்த ஒப்பந்தம் சில நாட்களுக்கு முன் நடைமுறைக்கு வந்தது.


ஆனால், இந்த ஒப்பந்தத்தை அமெரிக்காவும், கிளர்ச்சிக் குழுக்களும் 199 முறை மீறியிருப்பதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் குற்றம் சாட்டியுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் கீழ் அமெரிக்கா தனது கடமைகளை நிறைவேற்ற தேவையான நடவடிக்கைகள் எடுக்காமல் போர்நிறுத்த ஒப்பந்தம் முறிந்தால், அனைத்து பொறுப்புகளும் அமெரிக்காவின் மீதுதான் விழும்’ என்று ரஷ்யா தெரிவித்துள்ளதாக பரபரப்பான தகவல் உலா வருகிறது.



Find out more: