திருவனந்தபுரம்:
கேரளாவில் அரசு மதுக்கடைகள் அரசு மதுக்கடைகள் இனி மூடப்படாது என்று அமைச்சர் ராமகிருஷ்ணா தெரிவித்துள்ளார். இதனால் "குடி"மகன்கள் உற்சாகத்தில் உள்ளனராம்.
அமைச்சர் ராமகிருஷ்ணா
கேரளாவில் உம்மன் சாண்டி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடந்த போது அரசு மதுக்கடைகள், மது பார்கள் படிப்படியாக மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
சொன்னது போல் கடந்த 2 ஆண்டுகளில் கேரளாவில் அரசு மதுக்கடைகள் மற்றும் 400-க்கும் அதிகமான மதுபார்கள் மூடப்பட்டன. இப்படி நடவடிக்கை ஒவ்வொரு ஆண்டும் தொடரும். அக்டோபர் 2-ம் தேதி காந்தி ஜெயந்தி நாளில் இந்த நடவடிக்கை இருக்கும் என்றும் காங்கிரஸ் அரசு அறிவித்தது.
இந்நிலையில் அங்கு ஆட்சி மாற்றம் நடந்தது. தற்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டணி ஆட்சி பொறுப்புக்கு வந்துள்ளது. இவர்கள் காங்கிரசின் மது கொள்கையை ஏற்க முடியாது என்று முன்பே அறிவித்து இருந்தனர்.
இந்த ஆண்டு காந்திஜெயந்தி தினத்திற்கு இன்னும் 2 வாரங்களே உள்ள நிலையில் காங்கிரஸ் அரசு அறிவித்தப்படி கம்யூனிஸ்ட் அரசும் மதுக்கடைகளை மூடுமா? என்ற கேள்வி எழுந்தது. இதை தற்போது தெளிவுப்படுத்தி உள்ளார் கேரள கலால் அமைச்சர் ராமகிருஷ்ணன்.
அவர் என்ன சொல்லியிருக்கிறார் என்றால்... கேரளாவில் தற்போது செயல்பட்டு வரும் அரசு மதுபான கடைகள் இனி மூடப்படாது.
கடந்த காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வந்த மதுக்கொள்கையால், மாநிலத்திற்கு எந்த பலனும் ஏற்படவில்லை என்று சொல்லி "குடி"மகன்கள் வயிற்றில் பால் வார்த்துள்ளார்.