ஜெனிவா:
அடைக்கலம் தருமா இந்தியா என்பதுதான் தற்போது பெரிய கேள்விக்குறியாக எழுந்துள்ளது. எதற்கு என்று தெரியுங்களா?
இந்தியாவில் அடைக்கலம் கேட்டு விண்ணப்பம் செய்ய உள்ளதாக பலூசிஸ்தான் போராட்ட குழு தலைவர் பிரகாம்தாக் புக்டி தெரிவித்துள்ளதுதான்.
பலூசிஸ்தானிற்கு சுதந்திரம் கேட்டு போராடிய நவாப் அக்பர் கான் புக்டி கொல்லப்பட்டதை தொடர்ந்து, அவரது பேரன் பிரகாம்தாக் புக்டி போராட்டம் நடத்தி வருகிறார்.
அவர் தற்போது சுவிட்சர்லாந்தில் வசித்து வருகிறார். அவர் இந்தியாவில் தஞ்சமடைவார் என்று ஒரு பரபரப்பான தகவல் வெளியானது. இந்நிலையில் ஜெனிவாவில் அவர் கூறுகையில், இந்தியாவில் அடைக்கலம் கேட்டு விரைவில் விண்ணப்பம் செய்வேன். இது தொடர்பாக சட்ட ரீதியிலான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பாக்., ராணுவ தளபதிகளுக்கு எதிராக சர்வதேச கிரிமினல் கோர்ட்டில் பலூச் போராட்ட குழு சார்பில் வழக்கு தொடரப்படும். நீதிக்கான சர்வதேச கோர்ட்டில், சீனாவுக்கு எதிராக வழக்கு தொடரவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக இந்தியா, ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசம் உதவி கோரப்படும் என்று தெரிவித்துள்ளார்.