கர்நாடகா:
மகிழ்ச்சியாக இருந்தாலும் அதை கொண்டாட முடியாத நிலையில் என்னவாகுமோ என்று பதற்றம் தான் உருவாகி உள்ளது.
உச்ச நீதிமன்றம் நேற்று வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு ஒன்றை வழங்கியது. காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க வேண்டும். அதுவும் 4 வார காலக்கெடுவுக்குள் அமைக்க வேண்டும் என்பதுதான் அந்த சிறப்பு மிக்க தீர்ப்பு.
இந்த தீர்ப்பு தமிழக மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும், கர்நாடகத்தில் நிலைமை தலைகீழ்தான். ஏற்கனவே தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட்டதற்கு வெடித்த வன்முறை வெறியாட்டங்கள் தமிழர்களை அச்சப்படுத்தி உள்ளது.
இந்நிலையில் இந்த தீர்ப்பினால் கர்நாடகத்துக்கு மேலும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் மீண்டும் போராட்டங்கள் தொடங்கி விட்டன. மண்டியாவில் முன்னாள் எம்.பி மாதே கவுடா தலைமையில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மைசூரு-பெங்களூரு நெடுஞ்சாலையை மறித்து இந்த போராட்டம் நடந்து வருகின்றன. இப்படி பல இடங்களில் போராட்டங்கள் நடந்து வருவதால் மீண்டும் தமிழர்களுக்கு ஆபத்து ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது. இந்த போராட்டங்கள் இன்று முதல் மீண்டும் தீவிரமடையும் என்று தகவல்கள் பரபரக்கிறது. இதனால்