சென்னை:
இது... இதுதான்... அந்த சுவிட்ச் பாக்ஸ்... சிறையில் உள்ளே எடுத்த படம் லீக்... லீக்...
என்ன விஷயம் என்றால்...? சிறையில் தற்கொலை செய்து கொண்ட ராம்குமார் கடித்து தற்கொலை செய்துகொண்ட அந்த மின்சார ஒயர், கரண்ட் பாக்ஸ் போன்றவற்றின் புகைப்படம் ஊடகங்களில் வெளியாகி பெரும் பரபரப்ப கிளப்பி உள்ளது.
சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமார் சிறையில் மின்சார ஒயரை கடித்து தற்கொலை செய்துகொண்டதாக கூறப்பட்டது. ஆனால் அவரது மரணத்தில் பெரும் சந்தேகம் உள்ளது என்று அவரது குடும்பத்தினர் போர்க்கொடி பிடித்துள்ளனர்.
![Image result for ramkumar murder](http://media.newindianexpress.com/Swathi-murder-suspect-2.jpeg/2016/07/02/article3510400.ece/alternates/w620/Swathi%20murder%20suspect%20(2).jpeg)
இந்நிலையில் ராம்குமார் கடித்து தற்கொலை செய்துகொண்ட அந்த மின்சார ஒயர், கரண்ட் பாக்ஸ் ஆகியவற்றின் புகைப்படம் ஊடகங்களில் வெளியாகி பெரும் புயலை கிளப்பி உள்ளது. சிறையில் எடுக்கப்பட்ட இந்த புகைபடம் எப்படி வெளியானது என சிறைத்துறையினர் குழப்பத்தில் உள்ளனர்.
ஏற்கனவே ராம்குமார் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றபோது எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியானதற்கு நீதிமன்றம் கேள்விகளை எழுப்பியது ஞாபகப்படுத்த வேண்டிய முக்கியமான ஒன்று.
ராம்குமார் தற்கொலை செய்துகொண்ட மின்சார பாக்ஸ் மற்றும் ஒயரின் புகைப்படம் வெளியானதில் நீதிமன்றத்தின் கண்டனத்துக்கு ஆளாகுவோமோ என்று சிறைத்துறை பொறுப்பாளர்கள் பீதியில் உள்ளனர். அதெல்லாம் சரிதான். சிறையில் இதை எப்படி படம் எடுத்தனர். அது எப்படி வெளியில் லீக் ஆனது. அப்போ... சிறையில் கைதிகள் மத்தியில் செல் உலா வருகிறதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.