சென்னை:
சுவாதி கொலையும் இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமாரின் தற்கொலையும்தான் தற்போது தமிழகத்தை பரபரப்பாக்கி உள்ளது. இந்நிலையில் ராம்குமார் தற்கொலை குறித்த முதல் தகவல் அறிக்கை வெளியாகி உள்ளது. 


ராம்குமார் மரணம் குறித்து காவல்துறை தரப்பில் முதல் தகவல் அறிக்கை எனப்படும் எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டதில் என்ன கூறப்பட்டுள்ளது தெரியுங்களா?


 சிறையில் டிஸ்பென்சரி இருக்கும் பகுதியில் உள்ள அறையில்தான் ராம்குமார் அடைக்கப்பட்டு இருந்தார். சம்பவம் நடந்த அன்று மாலை 4.30 மணிக்கு ராம்குமார் குடிக்க தண்ணீர் கேட்க வார்டன் பேச்சுமுத்து சிறைக்கதவை திறந்துவிட்டுள்ளார். அப்போதுதான் அந்த அதிர்ச்சி நடந்துள்ளது.1


 வெளியேவந்த ராம்குமார், திடீரென்று அருகில் இருந்த சுவிட்ச் பாக்ஸை பலமாக உடைத்து, அதில் இருந்த மின் கம்பியை இழுத்து தனது பற்களால் கடித்துள்ளார். இதைப்பார்த்த வார்டன் பேச்சிமுத்து, ஓடிவந்து லத்தியால் அடித்து அவரைக் காப்பாற்ற முயன்றார். பின்னர் ராம்குமார் அப்படியே மயங்கி கீழே விழுந்துவிட்டார்.

Image result for ramkumar switch board

பின்ரன் மின்சார இணைப்பை துண்டித்த வார்டன் பேச்சுமுத்து சிறைக் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார். பின்னர் சிறை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கு முன்பு, பணியிலிருந்த சிறை டாக்டர் ராம்குமாருக்கு முதலுதவி கொடுத்துள்ளார்.


ஆனால் அவரது நிலை மோசமாக இருந்ததால் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு ராம்குமாரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர் என்று அந்த முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


ராம்குமாரின் மரணத்தில் சந்தேகப்படுபவர்கள்... சுவிட்ச் பாக்ஸ் உடைத்து நொறுக்கும் அளவிற்கு வீக்காக இருந்ததா? சில விநாடி நேரத்தில் அதை உடைக்க முடியுமா... பல நாட்களாக சிறையில் இருக்கும் ராம்குமார் உடல் நிலையில் அதை செய்ய முடிந்ததா என்று பல கேள்விகளை எழுப்புகின்றனர். இதனால் சிறைத்துறையினர் பெரும் கிலியில் உள்ளனர்.


Find out more: