மெகபூர்:
ரத்தம்... ரத்தம்... சாலையில் சிதற... மோதிய கார் தொழிலாளி உடலோடு 3 கி.மீ. இழுத்து சென்ற கொடூரம் தெலுங்கானாவில் நடந்துள்ளது.


தெலுங்கானாவில் சாலையை கடக்க ஒரு தொழிலாளி முயன்றுள்ளார். அப்போது அந்த வழி மிக வேகமாக வந்த கார் அவர் மீது மோதியது. இதில் காரின் மேற்கூரையில் அந்த தொழிலாளி தூக்கி வீசப்பட்டார். அதோடு 3 கி.மீ தூரம் சென்ற பின்னரே கார் நின்றதுள்ளது. இந்த கொடூர சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.


 தெலுங்கானா மாநிலம் மெகபூர் நகரைச் சேர்ந்த பநீனிவாசலு(38). இவர் பஸ்ஸ்டாண்டிற்கு செல்ல சாலையை கடந்துள்ளார். அப்போது வேகமாக வந்த கார் ஒன்று அவர் மீது மோதியது.  இதில் அவர் உடல் காரின் மேற்கூரையில் தூக்கி வீசப்பட்டது. ஆனால் கார் நிற்காமல் அவரின் உடலோடு சென்றது. 

Image result for இறந்தவர் உடலுடன் 3 கி.மீ.  கார்

 3 கி.மீ தூரம் இந்த பநீனிவாசலு உடலுடன் சென்ற அந்த கார் பின்னர் ஓரம்கட்டப்பட்டு அதன் டிரைவர் எஸ்கேப் ஆகிவிட்டார். சாலை நெடுகிலும் இறந்தவரின் ரத்தம் தெறித்து கிடந்ததை கண்டு அப்பகுதி மக்கள் மிகுந்த வேதனையில் ஆழ்ந்துள்ளனர்.


Find out more: