ஹீனான்:
மகள்... செல்ல மகளின் ஒரு மாத பிறந்தநாளை எப்படி கொண்டாடி இருக்கிறார் தெரியுங்களா இந்த சீன தந்தை... முதல் மாதத்திற்கே இப்படி என்றால்... இப்பவே கண்ணை கட்டுதே.


தனது மகளின் முதல்மாத பிறந்த நாளை ஆளில்லா விமானங்களை பறக்கவிட்டு கோலாகலமாக கொண்டி தீர்த்துள்ளார் சீனாவின் ஹீனான் மாகாணத்தைச் சேர்ந்த யாயுன்.


இவருக்கு கடந்த மாதம் பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைகக்கு ஒரு மாதம் நிறைவடைந்துள்ளது. பணக்கார தந்தையான இவர், தனது மகளின் முதல்மாத பிறந்த நாளை மறக்க முடியாத அளவிற்கு கொண்டாட முடிவு செய்துள்ளார். 


இதனால் பிறந்த நாளிற்கு அழைத்திருந்த உறவினர் மற்றும் நண்பர்களுக்கு ட்ரோன் (ஆளில்லா விமானம்) வாங்கி கொடுத்தார்.
அவர்களும் குழந்தைக்கு வாழ்த்துக்களையும், ஆசிர்வாதத்தையும் கொடுத்துவிட்டு ட்ரோன்களை பறக்கவிட்டனர்.


இதனால் பிறந்த நாள் கொண்டாடப்பட்ட இடத்திற்கு மேல் பட்டாம்பூச்சி பறப்பதுபோல் ட்ரோன்களாக பறக்க அந்த இடமே அதகளம் ஆகி உள்ளது.


இந்த பிறந்த நாள் விழாவில் பறந்த ஒரு ட்ரோனின் விலை சுமார் 1800 டாலர் இருக்கும் என்று சொல்றாங்க... முதல் மாதத்திற்கே இப்படி என்றால்... அதுசரி... பாசத்திற்கு முன்பு பணம் எப்படி நிற்கும்...


Find out more: