இங்கிலாந்து:
எதை போட்டாலும் அந்த பொருள் கல்லாக மாறினால் எப்படி இருக்கும். ஆமாங்க... அப்படிப்பட்ட அதிசய கிணறு இருக்குங்க இங்கிலாந்தில்.


இங்கிலாந்தில் உள்ள ஒரு கிணற்றுக்குள் எதைப்போட்டாலும் ஒரு வாரம் கழித்து அந்த பொருள் கல்லாக மாறிவிடுகிறதாம். இந்த அதிசய கிணற்றை பார்க்க பார்வையாளர்கள் அதிகளவில் குவிந்தபடி உள்ளனர். 


 இந்த கிணற்றை பற்றி ஆராய்ச்சி செய்ய உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆராய்ச்சியாளர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.


 எந்த பொருளாக இருந்தாலும் அது ஒரு வாரத்தில் கல்லாக மாறி விடுகிறது. இதை பரிசோதிக்க சிலர் பொம்மைகளை கயிற்றில் கட்டி தொங்க விட்டு செல்கின்றனர். ஒரு வாரத்திற்கு பிறகு பார்த்தால் அந்த பொம்மைகளும் கல்லாக இருந்தால் எப்படிப்பட்ட ஆச்சரியமாக இருக்கும்.


 இந்த கிணறு பற்றி அப்பகுதியில் வசிக்கும் சிலர் கூறுகையில் கிணற்றில் கடவுள் இருக்கிறார் என்றும், ஒரு சிலர் கிணற்றில் ஆவிகள் இருப்பதாகவும் கூறி வருகின்றனர். இருப்பினும் இந்த கிணறு சுற்றுலாப்பயணிகளால் அதிசய கிணறாகவே பார்க்கப்பட்டு வருகிறது.



Find out more: