ஆலப்புழா:
குளிக்கும்போது பானைக்குள் மாட்டிக்கொண்ட 2 வயது குழந்தையை தீயணைப்பு வீரர்கள் மீட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


 கேரளா மாநிலம் ஆலப்புழாவை அடுத்த ஆலுவாவைச் சேர்ந்த தம்பதி சந்தோஷ், திவ்யா. இவர்களின் குழந்தை நிரஞ்சனா (2). 


நிரஞ்சனாவை அவரது தாயார் குளிக்க வைக்க வீட்டிற்கு பின்புறம் அழைத்துச் சென்று உட்கார வைத்துவிட்டு சமையல் அறைக்கு சென்று வந்துள்ளார்.


திரும்பி வந்த போது குழந்தை குளிக்க வைத்திருந்த தண்ணீர் பானைக்குள் உட்கார்ந்திருந்தால் எப்படி இருக்கும். அதிர்ந்து போய் குழந்தையை தூக்க முயன்றார். பானை சிறியது என்பதால் குழந்தை பானைக்குள் மாட்டிக்கொண்டது. அவ்வளவுதான் தனக்கு ஏதோ ஆகிவிட்டது என்ற நினைப்பில் குழந்தை அலறி துடிக்க... பெற்ற தாயும் சேர்ந்து கலங்கி விட்டார். 


எவ்வளவோ முயற்சி செய்தும் குழந்தையை மீட்க முடியாததால் தீயணைப்புத்துறைக்கு தகவல் பறந்தது. அங்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் பானையை அறுத்து குழந்தையை பத்திரமாக மீட்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி விட்டது.


Find out more: