டோக்கியோ:
குறைந்த நிலநடுக்கம் என்றாலும் மக்களின் பய நடுக்கம் அதிகமாகவேதான் இருந்தது. விஷயம் இதுதான்!


ஜப்பான் நாட்டின் கட்சூரா பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 5.3 ஆக பதிவாகியுள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஜப்பானில் 6.1 ஆக நிலநடுக்கம் ஏற்பட்டது.


இந்நிலையில் ஜப்பானின் கட்சூரா மற்றும் சிபா ஆகிய பகுதிகளில் நிலநடுக்கம் 5.3 ஆக பதிவானதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். 
கட்சூரா பகுதியில் இருந்து சுமார் 161 கி.மீ., தொலைவில், 10 கி.மீ., ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து தகவல்கள் வெளியாகவில்லை. 



Find out more: