கோவை:
கோவை நகரமே பெரும் பதற்றத்தில் இருக்கிறது. நள்ளிரவில் நடந்த படுகொலை சம்பவத்தால்.


கோவையில் இந்து முன்னணி பிரமுகர் நள்ளிரவில் படுகொலை செய்யப்பட்டார். இதனால் பதற்றம் ஏற்பட்டதையடுத்து அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.


கோவை இந்து முன்னணி செய்தி தொடர்பாளர் சசிகுமார். இவர் தனது பணிகளை முடித்துவிட்டு நள்ளிரவில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.


அப்போது சுப்பிரமணியம்பாளையம் பகுதியில் இவர் வருகைக்காக மர்மநபர்கள் சிலர் பதுங்கி இருந்துள்ளனர். பின்னர் சசிகுமாரை வழிமறித்து ஆயுதங்களால் தாக்கிவிட்டு தப்பியோடிவிட்டனர். 


இதில் பலத்த காயமடைந்து உயிருக்கு பேராடிய சசிகுமாரை அப்பகுதி மக்கள் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்ந்துள்ளனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சசிகுமார் பரிதாபமாக இறந்தார். இச்சம்பவத்தையடுத்து அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. பதற்றத்தை தணிக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.


கோவை - மேட்டுப்பாளையம் புறநகர் மற்றும் நகரப் பேருந்துகள் இயக்கப்படவில்லை. கவுண்டம்பாளையம், சுப்ரமணியம்பாளையம், துடியலூர் உள்ளிட்ட பகுதிகளில் கடைகள் மூடப்பட்டுள்ளன. கோவை - மேட்டுப்பளையம் சென்ற தனியார் பஸ் கண்ணாடி உடைக்கப்பட்டது.


இதேபோல் திருப்பூரிலும் கல்வீசி பஸ் கண்ணாடி உடைக்கப்பட்டது. பெரும்பாலான பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. பல்லடம் ரோடு, ஊத்துக்குளி ரோடு, கொங்கு மெயின்ரோடு, அவினாசி ரோடுகளில் தனியார் பஸ்கள் எதுவும் இயக்கப்படவில்லை. பதற்றம் அதிகரித்துக் கொண்டே செல்வதால் மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.


Find out more: