பெய்ஜிங்:
டூப்... டூப்... இதுக்குமா... ஏன்ப்பா... அப்ப எதுக்குதான் நீங்களே போவீங்க... போடுங்கய்யா நல்லா டூப்பை... என்ன விஷயம் தெரியுங்களா?


சீனாவில் உள்ள பெய்ஜிங் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் படிக்கும் மாணவர்கள் தங்களுக்கு பதிலாக வகுப்புகளைக் கவனிப்பதற்கு வாடகைக்கு ஆட்களை நியமிக்கிறார்கள். எப்படி எல்லாம் யோசிக்கிறார்கள்... முடியலை... நம்மால முடியலை சாமியோவ்...


 வாரத்துக்கு 5 வகுப்புகள், 2 வாரங்கள், ஒரு மாதம், 6 மாதங்கள் என்று தங்களுக்குப் பதில் வேறு ஆட்களை வாடகைக்கு நியமிக்கும் மாணவர்கள் அவர்களை வகுப்புகளை கவனிக்க வைக்கிறார்கள். 


இப்படி வாடகைக்கு வரும் நபர்களுக்கு, மாணவர்கள் மத்தியில் செம கிராக்கி இருக்காம். அடப்பாவிங்களா... இதை பிஸினசாகவே செய்றீங்களா? 


 தங்களுக்கு பதிலாக வகுப்புக்கு அனுப்பப்படும் வாடகை நபர்களுக்கு போலி அடையாள அட்டைகளையும் வழங்கி விடுகிறார்கள். இதுவேறயா...


 இவ்வாறு வாடகைக்கு வருபவர்கள், மாதம் 10 ஆயிரம் ரூபாய் வரை சம்பாதிக்கிறார்கள். (அண்ணே பெய்ஜிங்குக்கு எங்களுக்கும் ஒரு டிக்கெட்...)


 நிறைய மாணவர்கள் வகுப்பில் இருப்பதால், வாடகைக்கு வந்து அமர்பவர்களைக் கண்டுபிடிப்பது சிரமமாக இருப்பதாக அந்நாட்டு பேராசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.



Find out more: