நியூயார்க்:
வெளிநாட்டு சக்திகளின் சதிதான் என்று யாஹீ சொல்லியுள்ள குற்றச்சாட்டு பரபரப்பை கிளப்பி உள்ளது.
இணையதளத்தின் ஜாம்பவானாகிய யாஹீவின் வாடிக்கையாளர்களின் பாஸ்வேர்ட் மற்றும் இதர முக்கிய ரகசியங்கள் ஹேக்கர்களால் கடந்த 2014ம் ஆண்டில் திருடப்பட்டது. இதனால் யாஹீவிற்கு செம டென்ஷன்.
அவ்வளவுதான் விசாரணை களத்தில் தானே நேரடியாக குதித்தது. ஜேம்ஸ்பாண்ட் ரேஞ்சிற்கு இதன் விசாரணை நீண்டதில் தெரியவந்த தகவல்கள் பெரும் அதிர்ச்சி ரகங்களாம்.
முக்கிய ரகசியங்கள் ஹேக்கர்களால் திருடப்பட்டதன் பின்னணியில் வெளிநாட்டு சக்திகளின் சதி மறைந்துள்ளதை கண்டுபிடித்ததால் தற்போது யாஹீ நிறுவனம் அதை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து யாஹீ வெளியிட்டுள்ள அறிக்கையில் என்ன சொல்லியிருக்காங்க தெரியுங்களா? "ஆன்லைன் தொழில்நுட்பத்துறையில் வெளிநாட்டு சக்திகளின் ஆதரவுடன் ஊடுருவல் மற்றும் தகவல் திருட்டுகள் சமீபகாலமாக அதிகரித்து வருகிறது.
யாஹீ போன்ற நிறுவனங்கள் தங்களது பயனாளிகளின் கணக்குகளை வெளிநாடுகளை சேர்ந்த சில சக்திகள் குறிவைப்பது தெரியவந்தால், உடனுக்குடன் வாடிக்கையாளர்களுக்கு தெரிவிக்கும் புதிய புரோக்ராம்களை உருவாக்கியுள்ளன.
தங்களது ஆன்லைன் கணக்கு தொடர்பான விபரங்கள் பிறரால் நோட்டம் பார்க்கப்படுவதாகவோ, களவாடப்பட வாய்ப்புள்ளதாகவோ கருதும் நபர்கள் உடன் பாஸ்வேர்டு மற்றும் பாதுகாப்பு தொடர்பான கேள்வி-பதில்களை மாற்றிக் கொள்ளலாம்’ என்று தெரிவிச்சு இருக்காங்க...