அமெரிக்கா:
ஸ்டூடண்ட்டுக்காக தனது கிட்னியை கொடுத்து உயிர் காப்பாற்றிய ஆசிரியையை அமெரிக்கர்கள் பாராட்டி வருகின்றனர்.


அமெரிக்காவை சேர்ந்த 4 வயது சிறுமி லயாலா. இவளுக்கு மைக்ரோஸ்கோப் பாலியான்கிட்டிஸ் என்ற நோய் தாக்கியதால் கிட்னி பழுதடைந்தது. இதனால் 12 மணி நேரத்திற்கு ஒரு முறை டயாலிசிஸ் செய்ய வேண்டிய நிலை. 


மாற்று கிட்னி பொறுத்தினால் மட்டுமே சிறுமியை காப்பாற்ற முடியும் என்ற நிலை. இதுகுறித்து நாடு முழுவதும் விளம்பரம் செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த சிறுமியின் ஆசிரியை படிஸ்டா என்பவர் தனது ஒரு சிறுநீரகத்தை தானமாக கொடுத்து சிறுமியை காப்பாற்றி உள்ளார். 


மாணவிக்காக தன் கிட்னியை கொடுத்து உயிரை காப்பாற்றி ஆசிரியைக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.


Find out more: