சென்னை:
உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அ.தி.மு.க., நான்தான் முன்னாடி என்பது போல வேட்பாளர்கள் பட்டியலை வெளியிடப்பட்டுள்ளது.


உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கி உள்ளது. இந்நிலையில் 12 மாநகராட்சிகள், நகராட்சிகள் வார்டுகளுக்கான வேட்பாளர் பட்டியலை அதிமுக மேலிடம் அறிவித்துள்ளது.


இதிலும் நான்தான் முன்னாடி என்பது போல வேட்பாளர்கள் பட்டியல் வெளியீட்டில் அதிமுக முன்னிலை வகித்துள்ளது. தற்போதைய சென்னை மேயர் சைதை துரைசாமிக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை.


சென்னையில், பாலகங்கா, ஜேசிடி பிரபாகரன் ஆகியோர் வாய்ப்பை பெற்று மகிழச்சி அடைந்துள்ளனர். 


இதேபோல் திருச்சியில் தற்போதைய மேயர் ஜெயாவுக்கு தப்பி பிழைத்துள்ளார். சில நாட்களுக்கு முன்னர் அ.தி.மு.க.,வில் இணைந்த முன்னாள் மேயர் சாருபாலா தொண்டைமான், துணை மேயர் சீனிவாசன் ஆகியோருக்கும் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.


திருப்பூரில் முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம், ஆனந்தன், சேலம் மேயர் சவுண்டப்பன், தஞ்சாவூர் மேயர் சாவித்ரி ஆகியோருக்கும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.


வேலூர் மேயர் கார்த்தியாயினிக்கு வாய்ப்பு புஸ்... ஆக அவர் நொந்து போய் உள்ளாராம். 



Find out more: