காபுல்:
ஆப்கானிஸ்தான் நாட்டில் நேட்டோ மற்றும் அந்நாட்டின் விமானப்படை நடத்திய தாக்குதலில் பாகிஸ்தான் தலிபான் தீவிரவாத இயக்கத்தின் தளபதி கொல்லப்பட்டான்.
இந்த தீவிரவாதிகளின் தளபதிக்கு 2 கோடி ரூபாய் பரிசு தொகை அறிவிக்கப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது_
பாகிஸ்தானில் இயங்கிவரும் முக்கியமான தீவிரவாத இயக்கங்களில் ஒன்றாக தெஹ்ரிக் இ தலிபான் இயக்கம். இதன் தலைவன் ஹக்கீமுல்லா மசூத். இவன் கடந்த 2013-ம் ஆண்டு அமெரிக்க விமானப்படைகள் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டான்.
இந்த தீவிரவாத இயக்க தலைமை செய்தி தொடர்பாளராக இருந்த அசாம் கான் தாரிக் பின்னர் தளபதியாக பொறுப்பேற்று, பல தீவிரவாத செயல்களை உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் செய்து வந்தான்.
ராயிஸ் கான் என்றும் அழைக்கப்படும் இவனது தலைக்கு பாகிஸ்தான் அரசு 2 கோடி ரூபாய் பரிசு அறிவித்து தேடி வந்த நிலையில், பக்திகா மாகாணத்தில் நேட்டோ மற்றும் அந்நாட்டின் விமானப்படை நடத்திய தாக்குதலில் அசாம் கான் தாரிக் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.