சென்னை:
நண்பனா நீ... கொடூரன் என்று விஷயம் அறிந்தவர்கள் திட்டுகின்றனர். என்ன விஷயம் என்றால்...


மீன் பிடிக்கச் சென்ற போது ஏற்பட்ட மோதலால், நண்பன் நடுக்கடலில் தள்ளிவிட தத்தளித்த மீனவரை மீட்டது கடற்படை ரோந்து படை என்ற செய்திதான் அது. சினிமாவில் வந்த காட்சிபோலவே இது நடந்துள்ளது.


நாகை நம்பியார் நகரை சேர்ந்த மீனவர் சிந்துராஜ் (64). இவர் தனது நண்பருடன் மீன் பிடிக்க ஒரே படகில் கடலுக்கு சென்றார். நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக சிந்துராஜீக்கும் அவரது நண்பருக்கும் தகராறு ஏற்பட அப்போதுதான் அந்த விபரீதம் நடந்துள்ளது.


இந்த தகராறில் ஆத்திரமடைந்த அவரது நண்பர் சிந்துராஜை படகில் இருந்து கடலில் தள்ளி விட்டு படகை எடுத்துக் கொண்டு வேறுபக்கம் சென்றுவிட்டார். தன் நண்பன் தண்ணீரில் தத்தளிப்பதை கண்டும் மனம் இரங்க வில்லை. 


இந்நிலையில் நாகை கடல் பகுதியில் இருந்து 3 கி.மீ தூரத்தில் கடற்படை அதிகாரி எஸ்.மாண்டல் தலைமையில் சென்ற கடற்படை ரோந்து வீரர்கள் தத்தளித்து கொண்டிருந்த சிந்துராஜை மீட்டனர். 


பின்னர் நடந்த சம்பவம் விசாரித்து அறிந்து கொண்டு சிந்துராஜ் கடலோர போலீசாரிடம் ஒப்படைத்தனர். இத்தகவல் இந்திய பாதுகாப்புத்துறை செய்திக்குறிப்பில் வெளியிடப்பட்டுள்ளது. ரொம்ப...ப... நல்ல (?) நண்பன் இல்லீங்க...



Find out more: