இஸ்லாமாபாத்:
மனித உரிமை மீறல்களை அதிகம் செய்பவர்கள் பாகிஸ்தான் போலீசார் என்ற தகவல் பிற நாட்டு மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


என்ன விஷயம்பா என்றால்... பாகிஸ்தான் போலீசாரால்அ திகளவு மனித உரிமை மீறல் சம்பவங்கள் நடக்கிறது என்று சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ள தகவல்கள்தான் அதிர்ச்சி ரகமாக உள்ளது. 


சம்பந்தம் இல்லாதவர்களை கைது செய்வது, கொடுமைப்படுத்துதல், நீதிமன்ற காவலில் கொலை மற்றும் பாலியல் தொல்லை போன்றவை நடைபெறுகிறது என்று மனித உரிமைகள் அமைப்பு கண்டறிந்துள்ளது.


இதுகுறித்து 102 பக்க அறிக்கையில், பலூசிஸ்தான், சிந்து மற்றும் மாகாணங்களில் போலீஸ் உயர் அதிகாரிகள், பாதிக்கப்பட்டவர்கள் என பலரிடம் நடத்திய விசாரணை அடிப்படையில் இந்த அறிக்கையை தயாரித்துள்ளது இந்த அமைப்பு. 


2015ம் ஆண்டு 2 ஆயிரம் போலி என்கவுண்டர்கள் வேறு நடத்தியிருக்கிறார்கள் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 


சித்ரவதை, அகதிகள், ஏழைகள், மத சிறுபான்மையினர், வீடு இல்லாதவர் ஆகியோர் போலீஸ் வன்முறைக்கு ஆளாகும் அபாயத்தில் உள்ளனர்.


பெரும் கொடுமைகள் செய்வது, கடுமையாக தாக்குவது, கால்களை இரும்பு ராடுகளால் உடைப்பது, நொறுக்குவது, தூங்க விடாமல் தொந்தரவு கொடுப்பது என பல வழிகளிலும் மனித உரிமை மீறல்கள் நடக்கிறது. ஊழல் மற்றும் குற்ற போலீசாரால் பாகிஸ்தான் பாதுகாப்பற்றதாக உள்ளது என்று கூறி அதிர்ச்சி அலைகளை அந்த அறிக்கை ஏற்படுத்தி உள்ளது.


Find out more: