சென்னை:
யாருடனும் இல்ல... நாங்க தனித்து நிற்கிறோம் என்று இப்பவே உரக்க சொல்லிட்டார் தமாகா தலைவர் ஜி.கே.வாசன். 


  இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் என்ன சொல்லியிருக்கார் என்றால்... 


"நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் நிலவிய சூழ்நிலை காரணமாக ஒரு நல்ல நாகரிகமான, மக்கள் நலன் சார்ந்த மாற்று அரசியலை தமிழகத்தில் நிறுவ வேண்டும் என்பதற்காக ஒரு நல்ல கூட்டணியை அமைத்து தேர்தலை சந்தித்தோம்.


 ஆரம்பத்தில் நல்ல வரவேற்பு இருந்த போதிலும், தமாகா லட்சியங்களை மக்கள் மனதில் பதியவைக்க போதிய கால அவகாசம் இல்லை. இதனால் வெற்றி வாய்ப்பு கிடைக்கவில்லை. 


தற்போது உள்ளாட்சித் தேர்தல் களத்தை தனித்தே சந்திக்க வேண்டும் என்பதற்காக கடந்த 3 மாதங்களாக கடின உழைப்பை மேற்கொண்டோம். எனவே இந்த உள்ளாட்சி தேர்தலில் தனித்தே களம் காண உள்ளோம். நல்ல சூழலும் ஏற்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.


அப்போ... தேமுதிக, மக்கள் நலக்கூட்டணி என யாருடனும் கூட்டு சேராமல் தனித்து போட்டியிட முடிவெடுத்ததால் தமாகா நிர்வாகிகள் உற்சாகமாக தேர்தல் பணிகளில் குதித்துள்ளனர் என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.


Find out more: