புதுடில்லி:
உண்மையான முகத்தை காட்டியுள்ளது காங்கிரஸ். இதனால் தமிழக விவசாயிகள் மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அப்போ இடத்திற்கு தகுந்தார்போல் வேடம் போடுகிறதா காங்கிரஸ் என்று கொந்தளித்து போய் உள்ளனர்.


காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு தொடர்பாக கர்நாடக அரசு எடுக்கும் முடிவுகளுக்கு காங்கிரஸ் கட்சி உறுதுணையாக இருக்கும் என்று அதன் பொதுச் செயலாளர் திக்விஜய் சிங் சொன்னதுதான் தமிழகத்தை அதிர்ச்சிக்குள் தள்ளியுள்ளது.


திக்விஜய் சிங் கர்நாடகத்திற்கு பகிரங்கமாக ஆதரவு தெரிவித்துப் பேசுவது இது முதல் முறையல்ல. இருப்பினும் தொடர்ந்து அவர் இப்படி பேசுவதை காங். மேலிடம் கண்டிக்காமல் இருப்பதால் அவர்களின் அனுமதியுடன்தான் இப்படி பேசுகிறார் என்று எண்ணத் தோன்றுகிறது. 


தமிழகத்தின் சட்டப் போராட்டம் குறித்து வாயையே திறக்காமல் உள்ள பாஜவும், காங்கிரசும். ஆனால் காங்கிரஸ் மேலிடத்தைச் சேர்ந்த திக்விஜய் சிங் கர்நாடகத்திற்குப் பகிரங்கமாக ஆதரவு தெரிவித்துள்ளது கட்சியின் நிலைப்பாட்டை வெளிப்படுத்தி விட்டது. இதனால் தமிழக விவசாயிகளை அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். இரட்டை வேடம் போடும் காங்கிரசின் உண்மை முகம் தற்போது வெளிச்சத்திற்கு வந்து விட்டது. 



Find out more: