மேற்கு வங்கம்: 
போட்டார் முதல்வருக்கு ஒரு எஸ்எம்எஸ்... காப்பு கொண்டு வந்து மாட்டி இழுத்து சென்றது போலீஸ்.


விஷயம் இதுதான். மேற்கு வங்க மாநிலம் புர்ட்வன் மாவட்டத்தை சேர்ந்தவர் சுதிப்தோ ராய் (37). வக்கீல். கடந்த 2012ம் ஆண்டு இவரது தாயாரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். ஆனால் இதற்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை.


இதையடுத்து தற்போது இது குறித்து சுதிப்தோ, முதல்வர் மம்தா பானர்ஜிக்கு ஒரு எஸ்எம்எஸ் அனுப்பினார். அவ்வளவுதான் 
ஞாயிற்றுக்கிழமையும் கூட தங்களின் கடமையை செவ்வனே செய்துள்ளனர் போலீசார். சுதிப்தோவை கைது செய்துள்ளனர். இதை தடுக்க முயன்ற அவரது சகோதரருக்கும் காப்பு மாட்டினர்.


நியாயம் கேட்டதற்கு இப்படியா என்று சுதிப்தோ தரப்பு கேள்வி எழுப்ப... அதற்காக யார் கைது செய்தது... பிரிந்து வாழும் உங்கள் மனைவியை நீங்கள் துன்புறுத்தியதாக கொடுத்த புகாரில் அல்லவா கைது செய்துள்ளோம் என்று போலீசார் கூற... நொந்து போய் உள்ளார் சுகிப்தோ...



Find out more: