உத்தரபிரதேசம்:
பரவிய வதந்தியால் வணிகர்கள் பயப்பட... இப்போது ராஜதுரோக வழக்குப்பதிவு செய்யப்படும் என்று எச்சரித்துள்ளார் நீதிபதி. எதற்காக தெரியுங்களா?
ரூபாய் நோட்டுகள் விரைவில் கிழிந்து விடுவதால் மத்திய அரசு கடந்த 2010-ம் ஆண்டு 10 ரூபாய் நாணயத்தை வெளியிட்டது. இந்நிலையில் வட மாநிலங்களில் 10 ரூபாய் நாணயங்கள் செல்லாது என்று யாரோ கிளப்பி விட அவ்வளவுதான் எந்த கடையிலும் 10ரூபாய் நாணயத்தை வாங்க மறுக்க பெரும் பரபரப்பு உண்டானது.
குறிப்பாக உத்திரபிரேதம், டில்லி, அரியானா போன்ற மாநிலங்களில் வணிகர்கள் 10 ரூபாய் நாணயங்களை வாங்க செமத்தியாக மறுப்பு தெரிவித்துள்ளனர். இதையடுத்து பில்பிட் மாவட்ட மாஜிஸ்திரேட் ஒரு அறிவிப்பை வெளியிட்டார்.
அதில் என்ன சொல்லியிருக்கார் என்றால்... 10 ரூபாய் நாணயம் தேசிய பணமாகும். அதை வாங்க மறுப்பது குற்றமாகும். 10 ரூபாய் நாணயத்தை வாங்க மறுப்பவர்கள் மீது இந்திய தண்டனை சட்டம் பிரிவு 124ஏ-ன் கீழ் ராஜதுரோக வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று. இதுதான் தற்போது டாக் ஆப் சிட்டியாக உள்ளது. யப்பா... 10 ரூபாய் காசை வாங்கிங்கப்பா...