பெங்களூரு:
காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க முடியாது என்று மீண்டும் கர்நாடகா அடம் பிடிக்க ஆரம்பித்துள்ளது. இதனால் பிரச்னை அதிகரித்துள்ளது.
தமிழகத்திற்கு 3 நாட்களுக்கு 6000 கனஅடி நீர் காவிரியில் திறக்க வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நேற்று உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் கோர்ட் உத்தரவு குறித்து ஆலோசிப்பதற்காக முதல்வர் சித்தராமைய்யா தலைமையில் கர்நாடகாவில் அனைத்துக்கட்சி கூட்டம் நடந்தது.
இதில் எக்காரணத்தை கொண்டும் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கக்கூடாது. டில்லியில் காவிரி கண்காணிப்பு குழு கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர், வெள்ளிக்கிழமை மீண்டும் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி தண்ணீர திறப்பு பற்றி முடிவு செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.
இதில் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க முடியாது என மீண்டும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் மீண்டும் கோர்ட் உத்தரவை கர்நாடகா மீறுவதால் பிரச்னை அதிகரித்துள்ளது என்றுதான் கூறவேண்டும்.