மும்பை:
எலி... எலி... அதனால் என் பை "காலி" என்று நடிகை ஒருவர் புகார் "டுவிட்"டுள்ளார்.


லாத்தூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் முதல் வகுப்பில் சென்றார் பிரபல மராத்தி நடிகை நிவேதிதா சாராப். அப்போது அவர் தனது கைப்பையை தலைக்கு அருகில் வைத்து தூங்கியுள்ளார்.


அசந்து தூங்கிய அவருக்கு திடீர் என்று எலி எதையோ பிராண்டுவது போல் சத்தம் கேட்டுள்ளது. கண் விழித்து பார்த்த அவருக்கு அதிர்ச்சியோ அதிர்ச்சி; காரணம்... அவரது கைப்பையை எலி தன் பசிக்கு உணவாக்கி கொண்டுள்ளது. அட அதாங்க கடிச்சு குதறிடுச்சு. பேக்கில் புது டிசைன் போட்டுடுச்சு...


அப்புறம் என்ன நிவேதிதா தனது கைப்பையை புகைப்படம் எடுத்து ட்விட்டரில் போட்டு மத்திய ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபுவிடம் புகாராக சொல்லியிருக்கார். இதுக்கெல்லாம் மத்திய அமைச்சர் என்னங்க செய்ய முடியும்.


Find out more: