சென்னை:
பல வதந்திகள்... பல புரளிகள் என்று முதல்வர் ஜெயலலிதா உடல் நிலை குறித்து வந்த அனைத்து செய்திகளுக்கும் அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது. 


என்ன விஷயம் என்றால்... முதல்வர் ஜெயலலிதா கடந்த 22-ந்தேதி இரவு உடல் நலக்குறைவு காரணமாக சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். காய்ச்சல், நீர் சத்து இழப்பு ஆகியவை ஏற்பட்டது தெரிய வந்தது.


இதையடுத்து அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.


முதல்வர் ஜெயலலிதாவுக்கு எடுக்கப்பட்ட பல்வேறு மருத்துவ பரிசோதனை முடிவுகளை வைத்து அவரது உடல் நிலையை டாக்டர்கள் தினமும் கண்காணித்து வந்தனர். இதில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாம். 


இதனால் ஆஸ்பத்திரியில் இருந்தபடியே வழக்கமான தனது அலுவல் பணிகளை முதல்வர் ஜெயலலிதா செய்து வந்தார். இந்நிலையில் நேற்று மாலையில் இருந்து ஜெயலலிதா உடல்நிலை பற்றி பல வதந்திகள் உலா வந்ததால் அதிமுக தொண்டர்கள் அதிர்ச்சியடைந்தனர். 


இந்த வதந்தி காட்டுத்தீ போல் பரவியதால் அப்பல்லோ ஆஸ்பத்திரியில் இருந்து நேற்றிரவு 10.30 மணிக்கு அதிகாரபூர்வ செய்திக்குறிப்பு வெளியிடப்பட்டது. அதில் தலைமை செயல் அதிகாரி டாக்டர் சுப்பையா விஸ்வநாதன் கூறியிருந்ததாவது:


முதல்வர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் நல்ல பலன் கிடைத்துள்ளது. தேவையான மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவர் பூரண நலம் அடையும் வகையிலான சிகிச்சைக்காக மேலும் சில நாட்கள் ஆஸ்பத்திரியில் தங்கி இருக்க ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் உலா வந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி விழுந்துள்ளது.


Find out more: