ஆர்.கே நகர் தொகுதியில் நடக்கவிருக்கும் இடைத்தேர்தலை நோக்கி தான் அனைத்து மக்களின் பார்வையும் இருக்கிறது. இந்த சூழலில் அனைத்து கட்சியும் தனது வேட்பாளரை அறிவித்த நிலையில் பா.ஜ.க மட்டும் அறிவிக்காமல் இருந்தது.

இந்நிலையில் இசையமைப்பாளர் கங்கை அமரன் பா.ஜ.க சார்பில் நிறுத்த படுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது. தனது பண்ணை வீடான பையனூர் பங்களாவை சசி கும்பல் மிரட்டி கையெழுத்து வாங்கியுள்ளதாக பரபரப்பை ஏற்படுத்தியவர்.

இப்பொழுது ஆர்.கே.நகர் தொகுதியில் சசி சார்பில் டிடிவி தினகரன் நிற்கிறார் அவரை எதிர்த்து போட்டியிடலாம் என்று எதிர்பார்க்க படுகிறது.