ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் சசிகலா தரப்பினரும் பன்னீர்செல்வம் தரப்பினரும் இரட்டை இலை சின்னம் எங்களுக்கு தான் சொந்தம் என்று வாதம் செய்து வந்தனர்.
இந்நிலையில் நேற்று காலை தேர்தல் ஆணையம் இருதரப்பினரிடையும் தனித்தனியாக விசாரணை மேற்கொண்டது. அதன் பின் நேற்று மாலையில் முடிவு தெரிந்து விடும் என்று எதிர்பார்க்கபட்டது.
ஆனால் நேற்று இரவு தான் தேர்தல் ஆணையம் அறிவித்தது அதாவது இரட்டை இலை சின்னம் இன்று முதல் இடைக்காலமாக முடங்கியுள்ளது இரு அணிகளும் இரட்டை இலை சின்னத்தை பயன் படுத்த கூடாது கட்சி கொடியும் பயன் படுத்த கூடாது என்று. MGR மறைவிற்கு பிறகு இரண்டாவது முறை கட்சி சின்னம் முடக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.