சூடு பிடித்து கொண்டிருக்கும் தேர்தல் களம் தான் R.K.நகர் தொகுதி ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் நாங்கள் தான் அம்மாவின் உண்மை தொண்டர்கள் என்று ஆளுக்கு ஆள் கிளம்பிவிட்டனர். OPS அணி ஒரு பக்கம் சசி அணி ஒரு பக்கம் தீபா அணி ஒரு பக்கம்.
இந்நிலையில் நாங்களும் களத்தில் இருக்கிறோம் என்பதை காமிப்பதற்காக பா ஜ கட்சியின் வேட்பாளரும் இசை அமைப்பாளருமான கங்கை அமரன் சூப்பர் ஸ்டார் ரஜினியை நேரில் சென்று பார்க்க சென்றுள்ளார். அப்பொழுது ரஜினியிடம் ஆசிர்வாதம் பெற்றுள்ளார் என்னோட ஆசிர்வாதம் எப்பொழுதும் உங்களுக்கு உண்டு நான் உங்க கூடவே தான் இருக்கிறேன் என்று ரஜினி கூறியுள்ளார்.
இதனை கேட்ட கங்கை அமரன் ரஜினி அவருக்கு ஆதரவு தெரிவித்துவிட்டார் என்று எண்ணி வெளிப்படையாக சொல்லிவிட்டார். பின் இதனை கேள்விப்பட்ட ரஜினி மறுப்பு தெரிவித்தார் என்னுடைய ஆதரவு யாருக்கும் இல்லை என்று. ஆனால் உண்மையில் ரஜினி சொன்ன அர்த்தத்தை வேறுவிதமாக எடுத்துக்கொண்டு கங்கை அமரன் அறிவித்துவிட்டார். ரஜினி நான் எப்பொழுதும் உங்க கூடவேதான இருக்கிறேன் என்று கூறி இருக்கிறார் அதை தப்பாக எண்ணி அறிவித்துவிட்டார்.