ஓ பன்னீர் செல்வத்தை முதல்வராக்க பாஜக முயன்றது உண்மைதான் என்று பாஜகவின் ராஜ்யசபா எம் பி சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.
மேலும் இதுகுறித்து தனியார் தொலைக்காட்சிக்கு அளித்து பேட்டியின் போது அதிமுகவில் பொதுச்செயலாளராக பதவியேற்ற சசிகலா சிறிது காலத்திலேயே முதல்வராக பொறுப்பேற்க முயற்சி செய்தார். அதற்காக முதல்வர் பதவியில் இருந்த ஓ பன்னீர்செல்வத்தை மிரட்டி ராஜினாமா கடிதம் வாங்கியதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து அதிமுகவை விட்டு வெளியேறிய ஓ பன்னீர்செல்வத்தை மீண்டும் முதல்வராக்க பாஜக முயற்சித்தது. மத்திய அமைச்சர் சிலர் அவரை ஆதரித்தனர். ஆனால் சசிகலா தான் முதல்வராக வேண்டும் என அதிமுக எம் எல் ஏ க்கள் விரும்புகின்றனர். ஆகையால் சசிகலாவிற்கு நான் ஆதரவு தெரிவித்தேன் என்று கூறியுள்ளார்.