நயன்தாரா நடிக்கும் அறம் படத்தை மீஞ்சூர் கோபி இயக்குகிறார். இந்த படத்தில் நயன் கலெக்டராக நடித்துள்ளார். மீஞ்சூர் கோபி கத்தி பட சமயத்தில் அது என்னுடைய கதை என போராட்டம் செய்தவர். இந்நிலையில் இப்படத்தின் டீசரை இன்று மாலை 5 மணிக்கு ஏ.ஆர்.ரகுமான் ட்விட்டரில் வெளியிடுகிறார்.
இதனை தொடர்ந்து இளையதளபதி விஜய் நடித்து வரும் 'தளபதி 61' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு ராஜஸ்தானில் உள்ள பழமையான அரண்மனை உள்பட முக்கிய இடங்களில் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது. இதற்கான லொகேஷன் பார்க்கும் பணிகள் முடிவடைந்து விரைவில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.
இந்த படப்பிடிப்பில் ஒரு பாடல், ஒரு சண்டைக்காட்சி மற்றும் சில வசன காட்சிகளின் படப்பிடிப்பு நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. குறிப்பாக விஜய்க்காகவே ஸ்பெஷலாக ஏ.ஆர்.ரஹ்மான் பாடல் ஒன்றை கம்போஸ் செய்துள்ளதாகவும், இந்த பாடலின் டியூனை கேட்ட படக்குழுவினர் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த பாடல் விஜய்க்காக ரஹ்மான் கொடுத்த ஸ்பெஷன் ட்ரீட் ஆகவே கருதப்படுகிறது.