சொத்து குவிப்பு வழக்கின் குற்றவாளி சசிகலா பெங்களூரு சிறை விதிகளை காலில் போட்டு மிதித்து துவம்சம் செய்து வருவது தகவல் அறியும் சட்டத்தின் கீழ் அனைவருக்கும் அம்பலமாகியுள்ளது.பெங்களூரு சிறையில் 4 ஆண்டு காலம் சிறை தண்டனையை அனுபவித்து வருகிறார்.
அதேநேரத்தில் தம்மை அரசியல்வாதி என சொல்லிக் கொண்டு கட்சி தொண்டர்களை அனுமதிக்க வேண்டும் என அடம்பிடித்து வருகிறார் சசிகலா. சிறைவிதிகளின்படி ஒரு மாதத்துக்கு 2 அல்லது 3 பார்வையாளர்கள் சசிகலாவை சந்திக்க முடியும்.
நடராஜன்தான் அதிக முறை குற்றவாளியான தன் மனைவி சசிகலாவை அடிக்கடி சிறையில் சந்தித்துள்ளார். அதேபோல் வழக்கறிஞர்களும் சசிகலாவை அடிக்கடி சிறையில் சந்தித்து பேசியுள்ளனர்சிறைத் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடருவேன் எனவும் நரசிம்மமூர்த்தி கடுமையாக எச்சரித்திருக்கிறார்.