
ஆர்கே நகர் தொகுதியில் வாக்காளர்களுக்கு தினகரன் கோஷ்டி கொடுத்த ரூ2,000 நோட்டுகள் பெரும்பாலும் கள்ள நோட்டுகள் என தெரியவந்ததால் பொதுமக்கள் கடும் கோபத்தில் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
ஆர்கே நகரில் வெற்றி பெற வேண்டும் என்ற வெறியால் அதிமுக(அம்மா) அணி வேட்பாளர் தினகரன் பணத்தை அள்ளி இறைத்து வருகிறார். நூதன வழிகள் அத்தனையையும் முழுவீச்சில் பயன்படுத்தி பணப்பட்டுவாடா செய்து வருகிறது தினகரன் கட்சி கும்பல்.
கள்ளநோட்டை கொடுத்து ஓட்டை வாங்கும் தினகரனின் தில்லுமுல்லு ஆர்கே நகர் தொகுதி மக்களுக்கு அம்பலமாகி கொந்தளிக்க வைத்துள்ளதாம். கண்ணில்படுகிற தினகரன் அடியாட்களையும் பொதுமக்கள் போலி நோட்டுகளை கொடுத்தற்கு வறுத்து வருகின்றனர்.