ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தல் ரத்து செய்யப்பட்டதில் சசிகலா உறவினர்கள்தான் ரொம்பவே மன மகிழ்ச்சியில் உள்ளனராம். ஜெயலலிதா மறைவைத பின் அதிமுகவையும் ஆட்சியையும் கைப்பற்றிவிடுவதில் சசிகலாவின் உறவினர்கள் ஆளாளுக்குப் போட்டி போட்டனர். ஒருகட்டத்தில் கோட்டை உங்களுடையது; டெல்லி செங்கோட்டையது உங்களுடையது என பங்கு பிரித்து பேரானந்தப்பட்டனர்.
ஆனால் சசிகலாவுக்கும் அவரது உறவினர்களுக்கும் தமிழக மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து கொந்தளித்தனர். ஒட்டுமொத்த அதிமுக தொண்டர்களும் கொந்தளித்தே போயினர். இதனால் சசிகலா கோஷ்டி அடக்கி வாசித்தனர். சிறைக்குப் போன சசிகலா தனக்கு பதிலாக தினகரனை துணைப் பொதுச்செயலராக்கினார். ஆனால் தினகரனோ சசிகலா என்ற பெயரையே அடியோடு மறக்கும் அளவுக்கு ஆர்கே நகரில் ஓரம்கட்டி தாமே அதிமுக என துள்ளி துள்ளி வருகிறார்.
சசிகலாவின் உறவினர்கள் அனைவரையும் தள்ளி ஓரம்கட்டி தனிக்காட்டு ராஜாவாக வலம் வருகிறார். தற்போது ஆர்கே நகர் தொகுதி இடைத் தேர்தலையே தேர்தல் ஆணையம் ரத்து செய்துவிட்டது. இதனால் சசிகலாவின் உறவினர்கள் குறிப்பாக திவாகரன் வீட்டில் ரொம்ப மகிழ்ச்சியாம்.