நடிகை ராதிகாவிற்கு சொந்தமாக நடத்தும் ராடான் மீடியா நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர். கடந்த 7ஆம் தேதி கொட்டிவாக்கத்தில் உள்ள ராதிகா சரத்குமார் அவரது வீட்டில் வருமான வரி சோதனை நடைபெற்றது. அதைத்தொடர்ந்து இன்று அவர்களின் அலுவலகத்தில் அதிரடி சோதனை நடைபெறுகிறது.
ஆர்.கே.நகரில் வீடு வீடாக பணம் பட்டுவாடா செய்யப்பட்ட விவகாரத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர், அவருக்கு நெருக்கமான துணை வேந்தர் கீதாலட்சுமி, இயக்குநர் குழந்தைசாமி, நடிகர் சரத்குமார், முன்னாள் எம்பி சிட்லப்பாக்கம் ராஜேந்திரன் ஆகியோருக்குச் சொந்தமான 35 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமையன்ரறு அதிரடி சோதனை நடத்தினர்.
இந்தச் சோதனையில், 6 கோடி ரொக்கப்பணம் மற்றும் ரூ.185 கோடிக்கு சொத்து ஆவணங்கள் சிக்கியதாக தகவல்கள் கூறப்படுகிறது. தொகுதியில் பண விநியோகம் செய்ததற்கான ஆவணங்களும் கையும் களவுமாக சிக்கியதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. இதனையடுத்து தற்போது தேர்தல் ரத்து செய்யப்பட்டது.