தினகரன் ஒதுங்கி விட்டார் என்று கூறியது எல்லாம் முன்கூட்டியே திட்டமிட்ட நாடகமா என்று கேள்வி வலுத்துள்ளது. காரணம், ஓ.பி.எஸ் அணி இன்று வைத்துள்ள குற்றச்சாட்டுகள். அதிமுகவிலிருந்து ஒதுங்குவதாக டிவிட்டரில் கூறினார் தினகரன். ஜெயக்குமாரும் அதையே திருப்பி தெரிவித்தார்.
இதையடுத்து ஓ.பி.எஸ் அளித்த பேட்டியில் எங்கள் தர்மயுத்தம் வென்றது என்றார். ஆனால் திடீரென இன்று செய்தியாளர்களைச் சந்தித்த ஓ.பி.எஸ் அணியின் கே.பி.முனுசாமி, சசிகலா அணியை திட்டித் தீர்த்து விட்டார். சரமாரியாக விமர்சித்தார்.கே.பி.முனுசாமியின் பேச்சின்போது நேர்மையில்லமல் மாறி மாறி பேசுகிறது எடப்பாடி அரசு.
மதிப்பே இல்லாத தம்பிதுரையும், தான்தோன்றித்தனமாக பேசும் ஜெயக்குமாரும் என்று இருவரையும் அதிரடியாக வெளுத்து வாங்கி விட்டார்.மறுபக்கம் நடிகர் ரித்தீஷ் கூறுகையில் தினகரன் சற்று ஒதுங்கித்தான் இருக்கிறார். கட்சியை விட்டுவிட்டு போகவே இல்லையே. தினகரனும், சசிகலாவும் இல்லாத அதிமுக கட்சியே கிடையாது என்று கூறியுள்ளார். இதைப் பார்க்கும்போது தினகரனே சும்மா வெளி நாடகமாடுகிறாரோ என்ற குழப்பம் எழுந்துள்ளது.