தினகரன் ஜெயிலுக்கு போனால் என்ன? போயஸ் கார்டனில் சிறு வயது முதல்  செல்லப்பிள்ளையாக வளர்ந்த விவேக் ஜெயராமனை துணை பொதுச்செயலாளராக்கி விடலாம் என்று பெங்களூரூ சிறையில் இருந்துக்கொண்டே சசிகலா திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விரைவில் இது குறித்து ஊடகத்தில் அறிவிப்பு வெளியாகும் என்று அதிமுக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

Image result for vivek jayaraman sasikala


சசிகலா குடும்பத்தினரை கூண்டோடு விரட்ட வேண்டும் என்று ஓபிஎஸ் தரப்பு ஓங்கி குரல் கொடுத்து கூறினாலும் அடுத்தடுத்து அதிமுக தலைமை பொறுப்புக்கு அவரது குடும்பத்தினரே முன்னிலைப்படுத்தப்படுகின்றனர்.

Image result for vivek jayaraman sasikala



ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு பொதுச்செயலாளராக சசிகலா, தானே முதல்வராக நினைத்தார். அதற்காக தந்திரமாய் காய் நகர்த்தினார். ஆனால் விதி அவரை சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைக்கு போ என்று தள்ளியது. சிறையில் இருந்து ஆட்சியை நடத்தி விடலாம் என்று கட்சியின் துணை பொதுச்செயலாளராக தனது சொந்தமான டிடிவி தினகரனை நியமித்தார். இவரை நியமனம் செய்தது, சசிகலாவின் சகோதரர் திவாகரனுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை.இந்நிலையில் அவரும் ஜெயிலுக்குப் போக ஆட்சியை தங்களின் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள விவேக் ஜெயராமனை துணைப்பொதுச்செயலாளராக நியமிக்க உள்ளதாக அரசியல் தகவல்கள் வெளியாகியுள்ளன. சசிகலாவின் அண்ணன் ஜெயராமன் மற்றும் அண்ணி இளவரசிக்கும் மகனாகப் பிறந்தவர் தான்  இந்தப் புது செயலாலளர் விவேக் ஜெயராமன்.


Find out more: