
மாநில அதிமுக அம்மா அணியின் செயலாளர் புகழேந்தி அப்பல்லோவில் ஜெயலலிதாவின் சிகிச்சை புகைப்படங்கள் விரைவில் வெளியிடப்படும் என்று கூறி பரபரப்பை கிளப்பிவிட்டிருக்கிறர். அனுமதிக்காக காத்திருக்கிறோம். அவை வெளியானால் எல்லா உண்மையும் வெளிச்சத்துக்கு வரும் என்றும் அவர் கூறியுள்ளார்.
தமிழகத்தில் அமைச்சர்கள், ஒன்றாய் இணைந்து டிடிவி தினகரனையும், சசிகலா குடும்பத்தையும் ஒதுக்கி வைத்து விட்டதாக கூறியதால் கர்நாடகாவில் இருந்து வந்து ஆர்பாட்டம் நடத்தி கூட்டத்திற்கு ஆள் சேர்த்துக் கொடுத்தவர் இந்த புகழேந்தி.
அதிமுக (அம்மா) அணியின் துணை பொதுச் செயலர் தினகரனுக்கு ஆதரவாகவும், மத்திய அரசுக்கு எதிராகவும் மதுரையில் இன்று அதிமுக தொண்டர் ஒழுங்கிணைப்பு குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் புகழேந்தி கலந்துகொண்டார். அதற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு முறையான சிகிச்சையே அளிக்கப்பட்டது என்று உறுதியளிக்கிறார். மறைந்த முதல்வர் ஜெயலலிதா சிகிச்சையின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியிடப்படும்