இணையதளத்தில் ஒரு சர்வே நடத்தப்பட்டது.அந்த சர்வேயில் யாருக்கு அதிக மக்கள் ஆதரவு இருப்பதை கண்டுபிடிக்கப்பட்டது.இதில் பல வேடிக்கை தரும் ரிசல்டும் இருந்தன.இதில் தமிழகத்தில் திமுக- அதிமுகவுக்கு மாற்று எதுவும் இல்லை என அதிகம் பேர் தெரிவித்திருந்தனர்.
நாம் தமிழர் கட்சி, பாஜக, பாமக மற்றும் தேமுதிகவுக்கு ஆதரவாக கணிசமானோர் கருத்து தெரிவித்திருந்தனர். விடுதலை சிறுத்தைகள், மதிமுக, தமாகா ஆகியவற்று தலா 1% வாக்குகள்தான் கிடைத்தது.மொத்தம் 35,987 பேர் பங்கேற்ற இந்த சர்வேயில் ஒரு ஆச்சரியமும் நிகழ்ந்திருக்கிறது. தீபாவீட்டுக்காரர் கட்சிக்கு 608 பேர் (1.69%) ஆதரவு தந்துள்ளனர்.
தீபா பேரவையும் கூட தீபா வீட்டுக்காரரைவிட குறைவான மக்கள் ஆதரவைத்தான் பெறுள்ளது. தீபா பேரவைக்கு 163 பேர் (0.45%) தான் ஆதரவளித்துள்ளனர்.அதிலும் மிக குறைவான ஆதரவு பெற்றுள்ள கட்சி சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி. அக்கட்சிக்கு வெறும் 84 பேர் (0.23%) மட்டுமே ஆதரவு கொடுத்துள்ளனர்.