தமிழகத்தில் அதிமுக அரசே நீடிக்க வேண்டும் என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பகிரங்கமாக கூறியுள்ளார். இதுவரை தமிழகத்தில் பாஜக ஆட்சியை கைப்பற்றும் என பரபரப்பாக கூறியவர்கள் தற்போது அதிமுக அரசு மீது கரிசனம் காட்டுவது எதற்கு ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு இதுதான் சமயம் எப்படியாவது தமிழகத்தில் காலூன்றி விடவேண்டும் என பாஜக கடுமையாக முயன்று வருகிறது. மத்தியில் ஆளும் கட்சி என்பதால் பாஜகவுக்கு இதற்கான வாய்ப்புகள் அதிகமாக கிடைத்தும் வருகிறது. ஆரம்பத்தில் அப்போதைய முதல்வர் ஓ பன்னீர்செல்வத்துடன் இணக்கமாக இருந்து பாஜக அரசு  காய்நகர்த்தி வந்தது. இதையடுத்து கட்சிக்குள் ஏற்பட்ட மோதல் மற்றும் பிளவுகளை தொடர்ந்து தற்போது எடப்பாடி அரசுடனும் அதே இணக்கம் காட்டி வருகிறது.

Image result for pon radhakrishnan

இந்நிலையில் தமிழகத்தில் அதிமுக அரசு நீடிக்க வேண்டும் என்பதே பாஜகவின் விருப்பம் என பொன் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

Image result for beef ban

மாட்டுக்கறி தடை உள்ளிட்ட விவகாரங்கள் மத்திய அரசு மீது உச்சக்கட்ட கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பாஜக தமிழகத்தில் காலூன்ற முடியாது என்பதால் ஏற்கனவே உள்ளவர்கள் மீது சவாரி செய்யலாம் என்ற முடிவுக்கு வந்துள்ளதா பாஜக? தமிழகத்தில் பாஜக ஆட்சியை கைப்பற்றும், காலூன்றும் என்று கூறியவர்கள் திடீரென அதிமுக அரசே நீடிக்க வேண்டும் என்பதன் பின்னணி என்ன என்ற கேள்வி பலருக்கும் எழுந்துள்ளது


 


Find out more: