பரப்பன அக்ரஹார சிறையில் இருந்து சசிகலா வெளியில் சுற்றிவிட்டு மீண்டும் சந்தோஷமாக சிறைக்குத் திரும்பும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் தண்டனைக்காக அடைக்கப்பட்டுள்ள குற்றவாளி சசிகலாவும் இளவரசியும் சிறைத்துறை அதிகாரி ஒருவரின் சொகுசு காரில் அவ்வப்போது ஊர் சுற்றி வருவதாக புகார் எழுந்தது.

சசிகலா மாற்றம்?


அதனை சிறைத்துறை அதிகாரிகள் தொடர்ந்து மறுத்து வந்தனர். இந்நிலையில் சிறை வளாகத்தில் பதிவான சிசிடிவி காட்சிகள் ஒவ்வொன்றாக வெளியாகி பரபரப்பை கிள்ப்பி வருகிறது. இது கர்நாடக அரசுக்கு மிகுந்த நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.சசிகலா கைதிக்கான உடையை அணியாமல் வித்தியாசமாக நைட்டியுடன் வலம் வரும் வீடியோ வெளியானது.


பெருந்தொகை செலவழிப்பு


அந்த பரபரப்பு பீதி அடங்குவதற்குள் சசிகலா சுடிதார் அணிந்துகொண்டு சிறையில் இருந்து வெளியே சென்றுவிட்டு திரும்பும் வீடியோ வெளியாகி கடும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Find out more: