ஜனாதிபதி தேர்தலில் புதுச்சேரி மாநிலத்தில் காங்கிரஸ் வேட்பாளர் மீராகுமாருக்கு கொஞ்சம் கூடுதலாக 2 வாக்குகள் கிடைத்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஜனாதிபதி தேர்தலில் என்.ஆர். காங்கிரஸ், அதிமுகவின் ஆகியோரின் மொத்தம் 12 வாக்குகளைப் பெறுவதற்காக புதுச்சேரிக்கு அமித்ஷா நேரில் வந்து ஆதரவு கேட்டிருந்தார்.

Image result for meira kumar



தமிழகத்தைப் போலவே புதுவை அதிமுகவும் பாஜகவுக்கு பலத்த ஆதரவு தந்தது. இன்று வெளியிடப்பட்ட ஜனாதிபதி தேர்தல் முடிவுகளில் கொஞ்சம் அதிர்ச்சியானது புதுச்சேரியில் மீராகுமாருக்கு 17 வாக்குகளும் ராம்நத் கோவிந்துக்கு 10 வாக்குகளும்தான் கிடைத்துள்ளன என்பது. ஒரு வாக்கு செல்லாத வாக்கு.


Image result for meira kumar



மீராகுமாருக்கு காங்கிரஸ்- திமுகவின் 17 வாக்குகள்தான் கிடைக்க வேண்டும். ஆனால் 19 வாக்குகள் அல்லவோ கிடைத்திருக்கிறது. அதேபோல் ராம்நாத் கோவிந்துக்கு 12 வாக்குகள் கிடைத்திருக்க வேண்டும்.ஆனால் 10 வாக்குகள்தான் கிடைத்திருக்கிறது. என்ஆர் காங்கிரஸ்- அதிமுக அணியின் 12 எம்.எல்.ஏக்களில் ஒருவரும் சுயேட்சை எம்.எல்.ஏவும் பாஜகவைப் பற்றி சற்றும் கவலைப்படாமல் மீராகுமாருக்கு தைரியமாக வாக்களித்திருப்பது பாராட்டுக்குரியதுதான்!

Find out more: