
மிஷ்கின் இயக்கத்தில் விஷால், பிரசன்னா, அனு இம்மானுவேல், ஆண்ட்ரியா நடிப்பில் உருவாகி வரும் துப்பறிவாளன் திரைப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. நடிகை சிம்ரன், நடிகர் ஜான் விஜய், இயக்குனர்கள் திரு, பாண்டிராஜ், சுசீந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட இவ்விழாவில் பேசிய விஷால் இத்திரைப்படம் ஒரு தயாரிப்பாளராக தனக்கு பாண்டியநாடு திரைப்படத்தை விட மிக பெரிய வெற்றியாக அமையும் என்றும் , தனது திரை அனுபவத்திலேயே சிறந்த சண்டைக்காட்சிகளில் துப்பறிவாளன் மூலம் நடித்ததாகவும் கூறினார்.
மேலும் தனது திருமணம் விரைவில் நடைபெறும் என்றும் இந்த தகவல் வெளிவந்தால் "லட்சுமிகரமான" நடிகை கோபமுறுவார் என்றும் விஷால் நகைச்சுவையாக பேசினார்.
திருட்டு விசிடி உருவாக காரணமான முக்கிய நபர் யாரென்றும் உலகத்தின் எந்த இடத்தில் இருந்து இதனை செய்கிறார் என்றும் கண்டுபிடித்து விட்டதாகவும் கூறிய விஷால், இன்னும் இரண்டு வாரங்களில் அக்கும்பலை உலகத்துக்கு தோலுரித்து காட்டுவேன் என்றார்.